News Just In

1/05/2021 03:51:00 PM

மட்டக்களப்பு- புன்னைச்சோலை பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற நபர் முதலைக்கடிக்கு இலக்காகிய நிலையில் சடலமாக மீட்பு!!


நேற்று மாலை மட்டக்களப்பு பெரிய உப்போடைக் களப்பு ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற நபர் முதலைக்கடிக்கு இலக்காகி உடல் பலத்த சேதமடைந்த  நிலையில் இன்று அப்பகுதி கிரியோடைநீரோடையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு- குமாரபுரம் புன்னைச்சோலை பகுதியில் ஆற்றில் நேற்று மாலையில் மீன் பிடிக்கச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் மரியதாஸ் என்னும் 48 வயது நபர் நேற்று இரவு முதல் உறவினர்களால் தேடப்பட்ட நிலையில் முதலையால் பிடிக்கப்பட்டு முதலைக்கடிக்கு இலக்காகிய நிலையில் தொடர்ச்சியான தேடுதலின் பின்னர் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இவ்வாறு முதலையால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் இதற்கு உரிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளமை கவலையளிப்பதாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















No comments: