திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி பகுதியில் செய்கை பண்ணப்பட்ட பப்பாசி செய்கையின் அறுவடை நடவடிக்கைகள் நடைபெறவுள்ள நிலையில் விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்பில்லாதது பாரிய குறைபாடாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறேன்.
இவைதொடர்பாக விவசாயியொருவர் கருத்து தெரிவிக்கும் போது
ஏறக்குறைய முந்நூற்றி ஐம்பது பப்பாசி கன்றுகள் நட்டியுள்ளோம் இதற்கு ஏறக்குறைய இரண்டரை இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது இத்தொகையினை அறுவடை மூலம் பெறலாம் என கருதினோம் ஆனால் முடியவில்லை காரணம் சந்தை வசதிகள் மிகக் குறைவாக காணப்படுகின்றது.
காய்த்த பழங்களை சரியான முறையில் விற்பனை செய்ய முடியாதுள்ளது,சந்தையில் எழுபது ரூபாக்கு விற்பனையாகின்றது எங்களிடம் வியாபாரிகள் பதினெட்டு ரூபாக்கு கேட்கின்றார்கள் இந்த விலைக்கு கொடுக்க கூடியதாக இல்லை இதனால் நாம் நட்டத்தினை எதிர்நோக்கின்றோம், இந்த பப்பாசி செய்கைகள் அனைத்தும் நஞ்சற்ற பழ வகைகளாகும் இதனை விற்பனை மேற்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தி தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments: