News Just In

1/24/2021 01:42:00 PM

உயர்தர வகுப்புக்களை ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டம்; கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு..!!


கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அல்லது ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை உயர்தர வகுப்புக்களை ஜூலை மாத்ததில் ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் கூறினார்.

கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற வேண்டிய கல்விப் பொதுத் தாரதர பத்திர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் வரை பிற்போடப்பட்டிருக்கின்றது. எனினும், எந்தவொரு பாதிப்பும் மாணவர்களுக்கு ஏற்படாத வகையில் பரீட்சைப் பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments: