மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் போஷகர் எஸ் .சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் , சமூக சேவையாளருமான த . வசந்தராசா , மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் அந்தோனி லியோன் ராஜ் ஆகியோர் சங்க உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வினை தொடர்ந்து சங்கத்தில் இயங்குகின்ற உறுப்பினர்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் , சங்கத்தில் இயங்குகின்ற உறுப்பினர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன .
இந்நிகழ்வில் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும் , மாமாங்கம் கிராம அபிவிருத்தில் சங்க தலைவரும் , பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவருமான எம் .உதயராஜ் , சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் உபதலைவரும் , சமாதான நீதவானுமான எஸ் .கனகசபை , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்
கே .மாதவன் ,சங்க செயலாளர் ஆர் .லிலோஜினி , பட்டதாரி பயிலுனர்
டி.தயானந்த் மற்றும் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வு தற்போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுகாதார அதிகாரிகளினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








No comments: