News Just In

1/31/2021 03:14:00 PM

மட்டக்களப்பு வாவியருகே ஆணொருவரின் சடலம் மீட்பு..!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு வாவியருகேஞாயிற்றுக்கிழமை 31.01.2021 ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கண்ணகையம்மன் ஆலய வீதியை அண்டியுள்ள வாவியருகே அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்குத் தெரிவிக்கபட்டதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

இவர் சுமார் 60 வயதைக் கடந்திருக்கக் கூடியவர் என்று ஊகிக்கப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார் சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த சடலத்தைப் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் துவங்கியுள்ளனர்.










No comments: