News Just In

1/03/2021 10:54:00 AM

மட்டக்களப்பு மக்களுக்கு கிழக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை...!!


மட்டக்களப்பு நகரில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பணியாற்றிய வர்த்தக நிலையங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக நிலையங்களுக்குச்சென்று பொருட்களை கொள்வனவு செய்தவர்கள் தாமாக முன் வந்து அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தங்களையும், தங்கள் குடும்பத்தையும், மாவட்டத்தையும் பாதுகாக்க சம்பந்தப்பட்டவர்கள் தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு தங்களை அடையாளப்படுத்தி அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மக்கள் சுகாதார நடைமுறைகளில் கூடிய கவனம் செலுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: