News Just In

1/30/2021 06:46:00 PM

தற்போது வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி திறன்மிக்க தடுப்பூசியாகும் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் - தொற்று நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன்..!!


வடமாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துதெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுதல் நேற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போடும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பாதுகாப்பான தடுப்பூசியாகும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது. பக்கவிளைவுகள்மிக மிக குறைவு. இது மிகவும் திறன்மிக்க தடுப்பூசி.எனவே பொதுமக்கள் அனைவரும் போட்டுக் கொள்வது என வேண்டுகோள் விடுகிறேன்.சுருக்கமாக நான் ஒன்றை விரும்புகின்றேன். நான் என்னை நேசிக்கின்றேன். எனது குடும்பத்தை நேசிக்கின்றேன். எனது சமூகத்தை நேசிக்கின்றேன் எனது நாட்டை நேசிக்கிறேன் அதனால் நான் தடுப்பூசி போடுகின்றேன் எனவே அனைவரும் இந்த தடுப்பூசியினைபோட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

No comments: