சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 08 பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரரும், தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரரும், மற்றும் வலகாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 287 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 737 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 55,288 ஆக அதிகரித்துள்ளது.

No comments: