News Just In

1/01/2021 06:57:00 PM

கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா மரணம்- இன்று 7ஆவது மரணம் பதிவாகியது!!


அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அகிலன் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

No comments: