News Just In

1/03/2021 06:44:00 PM

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37000ஐக் கடந்தது!!


இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 535 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 252 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 44 ஆயிரத்து 371 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: