சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் தொற்று ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம், இரத்தம் விஷமடைந்தமை மற்றும் இருதய நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் பூஜாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் இரத்தம் விஷமடைந்தமை ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 283 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: