News Just In

1/24/2021 05:47:00 PM

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280ஆக அதிகரிப்பு!!


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கல்கிஸ்ஸை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் சிறுநீரக நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் ரணாலை பிரதேசத்தை சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் மற்றும் சிறுநீரக நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 280 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: