கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு நகர சபைகள் 8 பிரதேச சபைகள் ஆகியவற்றின் தவிசாளர்களின் விடயங்கள் தொடர்பில் தன்னால் முன்னதாக வெளியிடப்பட்ட கட்டளையைத் தான் விலக்கிக் கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அதி விசேஷ வர்த்தமானப் பத்;திரிகை மூலம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரால் ஜனவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேஷ வர்த்தமானப் பத்;திரிகையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகிய நான், 2021, ஜனவரி மாதம் 08ஆந் திகதிய 2209ஃ 73 ஆம் இலக்க, இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட நகர சபை மற்றும் பிரதேச சபைத்தவிசாளரின் விடயங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கட்டளையானது, 2021, சனவரி 27ஆந் திகதியிலிருந்து இத்தால் இரத்துச் செய்யப்படுகின்றது. என அறிவித்துள்ளார்.
முன்னதாக ஜனவரி 08ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் அம்பாறை நகர சபை ஏறாவூர் நகர சபை பொத்துவில், பதியத்தலாவ, இறக்காமம், மண்முனை, கோறளைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு, தம்பலகாமம், சேருவில ஆகிய பிரதேச சபைகளில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமையினைத் தீர்க்கும் முகமாக விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அந்த விசாரணைகள் முடியும் வரை அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களின் உப தலைவர்களை கடமைகளை நிறைவேற்றுவதற்கு தான் கட்டளை இடுவதாகவும் ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியிருந்தார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலே தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

No comments: