News Just In

1/06/2021 07:35:00 AM

முகக்கவசம் அணியாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை- 1062 பேர் கைது; 14 பேருக்கு கொரோனா!!


நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, முகக்கவசம் அணியாது செயற்பட்ட ஆயிரத்து 62 பேர் நேற்றைய தினம் PCR மற்றும் RAPID ANTIGEN பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, அவர்களில் 552 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட RAPID ANTIGEN பரிசோதனையில், 14 பேர் கொரேனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், ஏனைய 510 பேர், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அது தொடர்பான பெறுபேறுகள் வெளியாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி நடக்காத நபர்களை, PCR அல்லது rapid antigen பரிசோதனைக்கு உட்படுத்தும், விசேட நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, குறித்த நடவடிக்கை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், பொதுமக்கள், முகக் கவசங்களை அணியுமாறும், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டார்.

No comments: