கல்முனைப்பிராந்தியம் நாவிதன்வெளிப்பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
நாவிதவன்வெளி மத்திய முகாமைச் சேர்ந்த பெண்ணொருவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து, தற்போது கிழக்கில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு மகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1429 ஆக அதிகரித்துள்ளது.

No comments: