
மட்டக்களப்பு தொற்று நோயியல் வைத்திய அதிகாரி வைத்தியர் குணசேகரம் வழிகாட்டலில் காத்தான்குடி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆசாத் ஹசனின் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் காத்தான்குடியில் இன்று சிலருக்கான அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
புதிய காத்தான்குடி பரீட் நகர் பள்ளிவாசல் வளாகத்தில் இந்த பரிசோதனை இடம்பெற்றது.
இதில் 147 பேருக்கு மேற் கொண்ட அன்ரிஜன் பரிசோதனையின் போது 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்களின் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த அன்ரிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.
இன்று தொற்றாளர்களாக உறுதிப்படுதிப்படுத்தப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் எனவும் குறிப்பிட்டனர்.
கடந்த 10நாட்களுக்குள் காத்தான்குடியில் 76பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். காத்தான்குடிபிரதேசம் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட பிரதேசத்தில் தீவிரமான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



No comments: