News Just In

12/31/2020 05:59:00 PM

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை!!


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு இன்று (31) எழுந்தமானமாக செய்யப்பட்ட ரபிட் அன்டிஜன் பரீசோதனையில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனையானது இன்று கடமைக்கு வந்துள்ளவர்களுக்கு மாத்திரம் எழுந்தமானமாக செய்யப்பட்டது. இதில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து உத்தியோகத்தர்கள் கொரோனா இரண்டாம் அலை உருவானதைத் தொடர்ந்து கடமைக்கு வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில்,
இன்று முதல் காத்தான்குடியில் இருந்து வருகின்ற உத்தியோகத்தர்கள் ஐந்து தினங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வரமுடியாத நிலையில் வீடுகளில் இருந்து வேலைகளை செய்வதற்கு பணிக்கப்பட்டுள்ளனர்.





No comments: