மட்டக்களப்பு நகரில் நேற்று(30) வர்த்தகர்களுக்கு மேற்கொண்ட ரபிட் அன்டிஜன் பரீசோதனையில் சில வர்த்தகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டடுள்ளமையை தொடர்ந்து ஒரு நாள் மாத்திரம் மருத்தகங்கள், பலசரக்கு கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை மூடுமாறு நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள மருந்தகங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் மூடுமாறும், குறித்த நடைமுறையை பின்பற்ற மறுக்கும் வர்த்தகர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாளை புது வருடத்தை முன்னிட்டு வணக்கஸ்தலங்களில் விசேட வழிபாடுகளுக்கு செல்லும் பொது மக்கள் பெரிய கோயில்களில் 50 பேரும், சிறிய ஆலயங்களில் 25 பேருமாக கலந்து கொள்ள முடியும் என்றும், இதன்போது சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும், முகக்கவசங்கள், சமூக மற்றும் தனிநபர் இடைவெளியை சரியாக பின்பற்றுமாறும், தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் முதலவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments: