News Just In

12/23/2020 10:17:00 AM

மாளிகைக்காடு மையவாடி சுவரை தொடர்ந்து சாய்ந்தமருது மையவாடி சுவரும் கடலரிப்பில் சரிந்தது!!


நூருல் ஹுதா உமர்
கடந்த சில வாரங்களாக கடலரிப்புக்கு இலக்கான மாளிகைக்காடு ஜனாஸா மையவாடியை அண்மித்த சாய்ந்தமருது 15ம், 17ம் பிரிவுகளுக்காக மையவாடியாக அடையாளப்படுத்தபட்டு அண்மையில் அமைக்கப்பட்ட ஜனாஸா மையவாதியின் சுற்று சுவரின் ஒரு பகுதி கடலரிப்பினால் உடைக்கப்பட்டு நேற்றிரவு கடலுக்குள் சரிந்தது.

அம்பாறை மாவட்டத்தின் கிழக்கு பகுதி தொடர்ந்தும் இவ்வாறு கடலரிப்புக்கு இலக்காகி வருவதனால் அப்பிரதேசங்களில் வாழும் மீனவர்களும், பொதுமக்களும் கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி தொடர்பில் பல முன்னெடுப்புக்கள் நடைபெறுவதாக வாய்முலமே அறிவிக்கப்பட்டு வரும் இச்சூழ்நிலையில் இந்த சுவரும் கடலரிப்பில் சரிந்து விழுந்திருப்பது அப்பிரதேச மக்களுக்கு மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.






No comments: