News Just In

12/30/2020 05:36:00 PM

ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் வியாபார மேம்பாட்டுக்கு காரைதீவில் நிதி உதவி...!!


நூருல் ஹுதா உமர்
INSPIRED திட்டத்தின் கீழ் ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் GAFSO நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் "பொருளாதார அபிவிருத்தியினூடாக சமூகங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல்" எனும் கருப் பொருளின் ஊடாக காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அழகு கலையில் ஈடுபடும் பங்குபற்றுனர்களுக்கான மானிய ஊக்குவிப்பு தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய் காசோலையும், பலசரக்குக்கடை வியாபாரத்தில் ஈடுபடும் பங்குபற்றுனருக்கான ஈமானிய ஊக்குவிப்புத் தொகையாக ரூபா 194,500 காசோலையும் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் GAFSO நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜெ காமில் இம்டாட் மற்றும் ஆசிய நிலையத்தின் நிகழ்ச்சி திட்ட ஊத்தியோகத்தர் எம்.ஜவாஹிர் மற்றும் GAFSO நிறுவனத்தின் கள உத்தியேதகஸ்தர் எச்.ஆர்.எம். இஸ்மாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments: