News Just In

12/31/2020 04:31:00 PM

வாழைச்சேனை - கறுவாக்கேணி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட மகா ம்ருத்ஞ்ஜய கோம நிகழ்வு!!


புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் வழிப்படுத்தலில் உலகத்தையும், எமது முழு நாட்டையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீழ்வதற்காக எமது நாட்டிலுள்ள இந்து ஆலயங்களில் விசேடமாக மகா ம்ருத்ஞ்ஜய கோமம் , விசேட பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதனடிப்படையில் இன்றையதினம் 31.12.2020ம் திகதி வியாழக்கிழமை காலை 5.00மணிமுதல் 7.30மணிவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிலே உள்ள வாழைச்சேனை - கறுவாக்கேணி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் கோறளைப்பற்று பிரதேச இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நே.பிருந்தாபன் மற்றும் கலாசார உத்தியோகத்தர் திரு.கே.எஸ்.ஆர்.சிவகுமார், இவ் ஆலய பரிபாலன சபையினர் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆலய பிரதமகுரு வாமதேவ சிவாச்சாரியார். சிவஸ்ரீ.கண்ணன் குருக்கள் தலமையிலான குருமாரினால் மகா ம்ருத்ஞ்ஜய கோமம் மற்றும் விசேட பிரார்த்தனைகள் மிகவும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது. இவ்விசேட மகா கோமம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், தென்றல் எவ்.எம். அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்புசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.










No comments: