News Just In

12/31/2020 03:41:00 PM

கொரோனா தொற்றுடன் கைதிகள் தப்பி ஓட்டம்- பொது மக்களின் உதவியை கோரும் பொலிஸார்...!!


கொரோனா தொற்றுடன் தப்பிச் சென்ற சிறைக் கைதிகளை கைது செய்ய காவல் துறையினர் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

பொலநறுவை கல்லேல்ல சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து குறித்த ஐந்து சிறைக் கைதிகளும் இன்று அதிகாலை தப்பிச் சென்றனர்.

அங்கம்பிட்டியை சேர்ந்த 52 வயதுடையவர், பொரெலெஸ்ஸ் பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர், சுதுவெல்ல பகுதியை நேர்ந்த 27 வயதுடையவர், மாராவில்- இரண்டாம் குறுக்குதெருவை சேர்ந்த 26 வயதுடைய மற்றும் 31 வயதுடையவர்கள் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும், 071 859 12 33 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அறியத்தருமாறு காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: