News Just In

11/10/2020 12:26:00 PM

மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் உழவு இயந்திரத்தில் மோதுண்ட இளைஞர் சிகிச்சை பயனின்றி பலி- உழவு இயந்திரத்தின் சாரதி கைது!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வெளிச்சமில்லாமல் சென்ற உழவு இயந்திரத்தில் மோதுண்ட இளைஞர் சிகிச்சை பயனின்றி பலியாகியுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தோடு தொடர்புட்ட உழவு இயந்திர சாரதி திங்களன்று 09.11.2020 கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் செங்கலடி ஐயன்கேணிக் கிராமத்தில் வசிக்கும் கே.ஜெனுதாஸ் (வயது 23) என்ற இளைஞனே பலியானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

வெள்ளியன்று 06.11.2020 இவர் மட்டக்களப்பு பதுளை வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது எதிரே முகப்பு வெளிச்சமின்றி வந்து கொண்டிருந்த உழவு இயந்திரம் மோதியதில் இவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி திங்களன்று 09.11.2020 மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தார்.

இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் கரடியனாறு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.







No comments: