News Just In

9/19/2020 11:21:00 AM

VTN இணையத்தள ஊடக சேவையின் ஓராண்டு பூர்த்தியும் ஊடகவியலாளர்களுக்கான கெளரவிப்பும்!!


ஊடகத் துறையில் எமது VTN இணையத்தள ஊடக சேவையானது ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவுற்ற நிலையில், அவ் ஓராண்டு பூர்த்தியானது மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டதுடன், எமது ஊடகவியாளர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மட்டக்களப்பு- கல்லடி நொச்சிமுனை, கல்வி அபிவிருத்தி சங்க(EDS) கட்டிடத்தில் நேற்று(2020.09.18) வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்தநிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் VTN இணையத்தள ஊடக அமைப்பின் ஆலோசனையாளரும், கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஸ்தாபகருமான S.தேவசிங்கன் மற்றும் கல்லடி பேச்சியம்மன் கோயில் தலைவர், குமுகாய மேம்பாட்டு மன்றத்தின் (SAFE) செயலாளர், பொருளாளர் மற்றும் VTN ஊடகத்தின் ஊடகவியலாளர்கள், EDS பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் VTN இணையத்தள ஊடகசேவைக்கு பல வழிகளிலும் தகவல்களை வழங்கி ஊடகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய  ஊடகவியலாளர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியாளர்கள் தங்களின் அனுபவ பகிர்வுகளை வழங்கியதுடன் ஊடக வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பு தொடர்ச்சியாக இருக்கும் என்பதையும் தமது கருத்துரைகளில் தெரிவித்தனர்.

எமது ஊடகமானது இனம், மதம் கடந்து மட்டக்களப்பின் செய்திகள் மாத்திரம் இன்றி கிழக்கு மாகாணம் மற்றும் இலங்கை பூராகவும் சர்வதேச மட்டத்திலும் கிடைக்கின்ற உண்மைத் தன்மையான சட்ட ரீதியான செய்திகளை இணையத்தள ஊடக வாசகர்களுக்கு வழங்கி வந்துள்ளமை எமது செய்தி சேவையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது.

இந்த ஊடகத்தின் வளர்ச்சியில் பங்காற்றிய ஊடகவியலாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.  












































No comments: