இதன் அடிப்படையில் கல்முனை, சேனைக் குடியிருப்பு- 1, வம்மியடி வீதியில் ஓர் நெசவு உற்பத்தி நிலையமொன்றை SERVO நிறுவனம் நிறுவியுள்ளது. இந்த நெசவு உற்பத்தி நிலையமானது 2020.09.19 அன்று காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வானது SERVO நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீசன் அவர்களும் சிறப்பு அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.தி.ஜெ.அதிசயராஜ் அவர்களும் கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை ஆணையாளர் திரு.எம்.சி.அன்சார் அவர்களும் மற்றும் பல பிரமுகர்களும் மற்றும் JHC பழைய மாணவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
குறித்த நிறுவனத்தின் இச் செயற்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 11பெண்கள் நேரடியாக தொழில் வாய்ப்பை பெறுவார்கள் என SERVO அமைப்பின் பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன் எமது ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.


No comments: