News Just In

9/27/2020 01:05:00 PM

சொகுசு கார் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து- முச்சக்கரவண்டி சாரதி பலி!!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் சொகுசு கார் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்றிரவு(26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சொகுசு கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதி இன்னுமொரு வாகனம் ஒன்றினை சேதப்படுத்தி உள்ளதோடு முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை - சோனக வாடி, மூர் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய நடராசா அனுஷாந்தன் என்பவராவார்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments: