திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலொன்றில் 17 இந்தியப் பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை துறைமுகத்திற்கு இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் எரிபொருளை கொண்டு செல்வதற்காக வருகை தந்துள்ளது.
இந்த நிலையில், கப்பலில் வருகை தந்த ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளான 17 இந்தியப் பிரஜைகளும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பில் உள்ளதுடன், அவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது.
9/27/2020 12:29:00 PM
திருகோணமலைக்கு கப்பலில் வந்த 17பேருக்கு கொரோனா...!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: