News Just In

9/20/2020 01:48:00 PM

மீண்டும் கொரோனா பரவக் கூடும்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கான சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் பின்பற்றாமை கவலையளிப்பதாக, கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எந்தவொரு வழிமுறைகளையும் பின்பற்றாத தன்மையை சமூகத்தில் அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சிலர் வீதிப் போக்குவரத்திலும், பொதுப் போக்குவரத்திலும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது நடந்து கொள்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் பின்பற்றாத பட்சத்தில், நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் ஏற்படக் கூடும் என, சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் தலைமை தொற்றுநோய் தடுப்பு வைத்தியர் சுதத் சமரவீர கூறியுள்ளார்.

No comments: