மட்டக்களப்பில் பழமைவாய்ந்த கத்தோலிக்க ஆலயமான வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் தேவாலயத்தின் 176 வது வருடாந்த திருவிழா நாளை 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஏ.தேவதாசன் அடிகள் தலைமையில் நடைபெறும் திருநாள் கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு பெறவுள்ளது
இந்த தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த நான்காம் நாள் மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நற்கருணை ஆண்டின் மகத்துவத்தை போதிக்கும் நவநாட்கிரிகைகள் இடம்பெற்று திருநாள் கூட்டுத் திருப்பலியுடன் நிறைவுபெறவுள்ளது.
தினமும் திருச்செபமாலை புனித அன்னம்மாளின் மன்றாட்டு திருப்பலி என்பன ஆலயத்தின்பங்குத்தந்தை வண.இன்னாசி ஜோசெப் அடிகள் தலைமையில் நடை பெறுவதுடன் நேற்று சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு திருச்செபமாலை, நற்கருணை ஆராதனை ஆசீர் வழிபாடுகளைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்வான புனித அன்னம்மாளின் திருச்சுருபபவனி இடம்பெறவுள்ளது.
திருநாள் கூட்டுத் திருப்பலி மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஏ.தேவதாசன் அடிகள் தலைமையில் நாளை ஞாயிறு காலை ஏழு மணிக்கு நடைபெறுமெனவும். இம் முறைஅன்னதானம் நடைபெறமாட்டாதெனவும் ஆலய நிருவாகம் அறிவிக்கிறது.

No comments: