News Just In

9/14/2020 10:06:00 PM

மட்டக்களப்பு நகரில் உடற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!!


மட்டக்களப்பு நகரில் உடற்பயிற்சி நிலையம் திறக்கும் நிகழ்வு இன்று(2020.09.14) மாலை மிக விமர்சையாக நடைபெற்றது.

''Keshi Good Life Fitness Centre'' என அழைக்கப்படும் இந்த உடற்பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வில் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட மருத்துவ அதிகாரி Dr.நவலோகிதன் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் விருந்தினர்கள் இணைந்து குறித்த உடற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து Keshi Good Life Fitness Centre உருமையாளர்களினால் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கான நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.








































No comments: