News Just In

9/14/2020 07:29:00 PM

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி!!


கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பஹ்ரைனில் இருந்து கடந்த 2 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

No comments: