News Just In

9/17/2020 05:48:00 AM

தொழிலுக்காக வௌிநாடு செல்லவுள்ளவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!


பெண்களை வீட்டுப்பணிப்பெண்ணாக தொழிலுக்காக வௌிநாடுகளுக்கு அனுப்புவதை தனிப்பட்ட முறையில் எதிர்ப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஹாலிஹெலயில் அமைந்துள்ள ஜப்பான் தொழில் பயிற்சி மத்திய நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
குறித்த பெண்களுக்கு கௌரவமான தொழிலை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், அதிக வேதனத்துடன் கூடிய தொழில்களுக்காக பெண்கள் போன்று ஆண்களையும் அனுப்புவதற்கு தேசிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

வௌிநாட்டு பணிப்பெண்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தினை கொண்டு இன்று பலர் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்

No comments: