News Just In

9/27/2020 06:30:00 PM

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விநியோக நடவடிக்கை- 5 பிள்ளைகளின் தாய் கைது!!

இலங்கையை காலி நகரில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவர்களை இலக்காகக் கொண்டு ஹெரோயின் போதைப்பொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை காவல்துறையினர் இன்று (27) கைது செய்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 220 மில்லிகிராம் அடங்கிய போதைப்பொருள் பொதிகள் 42 கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காலி-கந்தவத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகில் இருந்தே இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 40 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயொருவர் என தெரிவிக்கப்படுகிறது.

No comments: