“அவதாரங்கள் மாத்திரம் உயிர்களை காப்பதில்லை. அவதரித்த நீ கூட உயிர்களைக் காத்திடலாம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இரத்ததான முகாம் மட்டக்களப்பு புனித சாள்ஸ் மண்டபத்தில் இன்றைய தினம் (ஞாயிறு) (27/09/2020) PAC குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த இரத்ததான நிகழ்வானது PAC குழுமத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்டர் ஜெகன் சத்தியா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கி மருத்துவர் குழு கொடையாளர்களிடம் இருந்து குருதியைப் பெற்றுக் கொண்டனர் .
2020 ஆம் ஆண்டில் இரண்டாவது தடவையாக ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த இரத்ததான முகாமில். முப்படைகளைச் சேர்ந்தவர்களும், அத்தோடு பெருமளவான பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டு குருதி வழங்கி இருந்தனர்.
கலந்துகொண்ட இரத்த கொடையாளர்கள் அனைவருக்கும் PAC குழுமத்தினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. குறித்த இரத்ததான நிகழ்விற்கான அனுசரணையை United bookshop, Vigo, Haamaa, JC catering, Sukeeva pharmacy, Oro Jewelry, உணர்வுள்ள உறவுகள் அமைப்பு ஆகியோர் வழங்கி இருந்தனர்.
PAC ஊடகப்பிரிவு







No comments: