மட்டக்களப்பு மக்கள் வோட்டு கட்சிக்கு வாக்களித்தால் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்கள் எனும் பெயரை சர்வதேசத்திடம் கூற முற்படுவர் என்று மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது பிரச்சாரக் கூட்டம் மட்டக்களப்பு கூழாவடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (31) நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றிய மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் கருத்து தெரிவிக்கையில்
தெரிவு செய்யப்பட்டவர் தமிழ் தேசிய போராட்டத்திற்கு எதிரானவர், போராட்டம் மழுங்கடிக்கப்படுவதற்கு அரசுடன் துணை நின்றவர். இந்த உதாரணத்தினை சர்வதேசத்திற்கு காட்ட முற்படுவார்கள். மட்டக்களப்பு மக்கள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு இல்லாத நபர்களை தெரிவு செய்து அனுப்பி இருக்கின்றார்கள். என்ற செய்தியை சர்வதேசத்திற்கு கூற முற்படுவர்.
எங்களுக்கு வாக்களிக்காதவிடத்து எங்களது சகோதர இனம் சார்ந்த ஒருவர் தெரிவு செய்யப்படும் சார்ந்தப்பம் இருக்கிறது. இவ்வாறு வாக்குகளை பிரிப்பதை நாங்கள் நிறுத்தி வெல்லுகின்ற கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இங்கே வெல்லுகின்ற கட்சி என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் தமிழ்ர்கள் கட்சிகள் சார்பில் வாக்குவங்கியினை பெற்று இருக்கின்றது.
சில்லறை கட்சிகள் களமிறக்கப்பட்டு இருப்பதனால் ஐந்து வீத வாக்குகளை கூட பெறமுடியாத சில்லறைக் கட்சிகள் கிட்டத்தட்ட ஐம்பது ஆயிரம் வாக்குகளை பிரித்து எங்களுக்கு கிடைக்கின்ற நான்காவது ஆசனத்தினை பறித்து சகோதர இனத்தவர் வர பங்களிப்பு செய்கின்றது. ஆகவே சில்லறைக்கட்சிகளை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: