News Just In

8/01/2020 03:26:00 PM

வாக்களிக்கும் விடயத்தில் பொதுமக்கள் கவனமெடுக்க வேண்டும்- மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
புதன்கிழமை (ஓகஸ்ட் 05) நடைபெற இருக்கின்ற நாமாளுமன்றப் பொதுத்தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் சிறிது நேரத்தை ஒதுக்கி வாக்களிக்கச் செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆயர் பொன்னையா ஜோசப் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் நான் அரசியல் சார்பற்றவன். எந்த அரசியல் கட்சிகளையும் சாராதவன். அரசியலுக்கு அப்பால் எல்லா மதங்களுக்கும் பொதுவாகவே சேவை புரிந்து வருகின்றேன். வாக்களிப்பது மனித உரிமை அது எமது கடமையுமாகும்.

சிறையிலிருப்பவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையினை அரசு வழங்கவேண்டும் என நான் முன்னர் கோரிக்கை விடுத்தவன். மட்டக்களப்பு மாவட்டத்தில் பலர் சிரமத்தில் வாக்களிப்பதில்லை. பலரது வாக்குகள் நிராகரிக்கப்படுபடும் வாக்குகளாக ஆகிவிடுகின்றது. இவற்றை நன்றாகக் கவனித்து வாக்களிக்க வேண்டும்

நான் சிவில் சமுகத்தின் போசகராக செயற்பட்டு வருகின்றேன். தேர்தல் பிரசாரங்களின்போது இனவாதம், மதவாதம், மொழிவாதம் இருக்கக்கூடாது. அதனைத் தவிர்க்கவேண்டும். வேட்பாளர்கள் வன்முறைகளைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். தேர்தலுக்கு முன்னரும் தேர்தலின் போதும் தேர்தலுக்குப் பின்னரும் இந்த ஒழுக்கங்களை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்.




No comments: