News Just In

8/03/2020 09:35:00 AM

கள் அருந்திய பாடசாலை மாணவன்; விசமானதன் காரணமாக நேர்ந்த கதி..!


கித்துல் கள் அருந்தியதன் பின்னர் அது விசமானதன் காரணமாக பாடசாலை மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் இன்று காலை (03) மீகஹகிவுல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவருக்கு அவரது நண்பர் ஒருவர் இவ்வாறு கள் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கம்பத பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயது மாணவர் ஒருவரே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள் அருந்தியதன் பின்னர் சிறிது நேரத்தில் இரத்த வாந்தி ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: