News Just In

8/03/2020 09:54:00 AM

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் விபரம் வெளியானது


நாட்டில் நேற்று எட்டு புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 2,823 ஆக அதிகரித்துள்ளது.

லங்காபுராவிலிருந்து ஒரு கொரோனா தொற்று நோயாளியின் கூட்டாளியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பி வந்த ஏழு பேரும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நேற்று வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர்.

அதன்படி, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 602 பேர் கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 926 பேர் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளன மேலும் 75 நபர்கள் குணமடைந்து நேற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனால் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 2,514 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 298 நபர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 45 பேரும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


No comments: