News Just In

7/05/2020 09:42:00 PM

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு


கிளிநொச்சி பூகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிராய் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வியாபார நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட முச்சக்கர மோட்டார் சைக்கிள் குறித்த விபத்தில் தீக்கிரையாகியுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பரந்தன் வீதியில் தம்பிராய் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்துடன் மோதுண்ட குறித்த மோட்டார் வாகனம் தீக்கிரையானது. அத்துடன் அந்த வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக பூநகரி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு இன்று காலை இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவரும் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments: