News Just In

7/30/2020 08:40:00 PM

மட்டக்களப்பில் முகங்களை துணியால் மறைத்து கொண்ட நபர்களால் கணவன், மனைவிக்கு நடந்த சம்பவம்


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கணவனும் மனைவியும் பயணிக்கும் போது இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் இருவரும் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடிப் பகுதியைச் சேர்ந்த கணவனும் மனைவியும் கொண்டயன்கேணியில் உள்ள அவர்களுடைய தொழில் நிலையத்திற்கு சென்று வீடு திரும்பும் போதே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவரும் வீட்டிற்குச் செல்லும் போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் முகங்களை துணிகளால் மறைத்துக் கட்டிக் கொண்டு, மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடுகளை மறைத்துக் கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட இருவரும் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: