News Just In

7/01/2020 06:14:00 PM

பயணிகளுக்கான அறிவிப்பு-போக்குவரத்து நேரத்தில் மாற்றம்


அலுவலக புகையிரத சேவைகளின் நேர அட்டவணையில் தற்காலிக மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடலோர ரயில் மார்க்கத்தில் தொடர்ந்தும் ஏற்படுகின்ற தாமதத்தை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய நேர அட்டவணை இரண்டு வாரங்களுக்கு பரீட்சிக்கப்படவுள்ளதாகவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட புகையிரத சேவையின் நேர அட்டவணையில் சில மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

No comments: