News Just In

7/05/2020 02:39:00 PM

டெங்கு நோயைக் கட்டுப்படுத்த புகை விசுறும் நடவடிக்கை


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் பெருகி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த புகை விசுறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அப் பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருகி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்கி, நுளம்புகளை அழிக்க புகை விசுறப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.





No comments: