News Just In

7/04/2020 06:56:00 PM

மட்டக்களப்பில் கௌபி அறுவடை விழா


மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் கௌபி அறுவடை விழா இன்று 03.07.2020 கிரான் விவசாய போதனாசிரியர் பிரிவில் பாலையடித்தோணா பிரதேசத்தில் பி.சிவநாதன் அவர்களின் தோட்டத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வு தொழிநுட்ப உத்தியோகத்தர் தி.மயூராஜனன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள வலயம் வடக்கு உதவி விவசாயப் பணிப்பாளர் ஈ.சுகந்ததாசன் பாடவிதான உத்தியோகத்தர் என்.விவேகாந்தராஜா பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.உதயகுமார் வேல்ட் விசன் உத்தியேகத்தர் எஸ்.பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்

மேலும் விவசாய போதனாசிரியர்களான
கே.நிஷாந்தன், எஸ்.சிறிகண்ணன் , பி.ரவிவர்மன் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எஸ்.மனோதர்சன் , அ. அனோஜன் , ஜி .விஜிதரன் , விவசாய அமைப்பினர், கிராம மட்ட பிரதிநிதிகள் விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கௌபி பயிர்ச்செய்கை தொடர்பான விழிப்பூட்டல் , விதை உற்பத்தி , இலாபம் தொடர்பான விடயங்கள் அதிதிகளால் கூறப்பட்டது






No comments: