
(மட்டக்களப்பு மொஹமட் தஸ்-ரீப்)
கொவிட் 1 9 கொரோனா பாதிக்கப்பட்ட இந்த வருடத்தில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜ பக்ஸவும் விவசாயத்துறை யை முன்னேற்ற மிகுந்த கரிசனை காட்டியிருக்கின்றனர் இந்தச் சந்தர்ப்பத்தில்எமது விவசாயிகளின் பங்களிப்பினாலேயே இன்றைய அரச அறுவடைவிழாவெற்றிகண்டு மிகச்சிறப்பாக நடந்துள்ளது
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாமட்டக்களப்பு கிரான் பூலாக்காட்டில் நடைபெற்ற மாவட்ட அரச நெல் அறுவடைவிழாவில் சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்.அங்கு அவர்தொடர்ந்து உரையாற்றுகையில்:-
எமதுமாவட்டம் விவசாயம் ,மீன்பிடித்துறையில் பொருளாதாரத்தை ஈட்டு கின்ற மாவட்டம் எவ்வளவுதான் நாம் அபிவிருத்திசெய்தாலும் விவசாயி களின் தரத்தை உயர்த்துவதுடன் மீனவர்களின் தரத்தையும் உயர்த்துவதன் மூலமே எமதுமாவட்டம்பொருளாதாரத்தில் நிறைவடைய வாய்ப்பிருக்கின் றது.
கொரோனா பாதிக்கப்பட்ட இந்த வருடத்தில்அதன் தாக்கம் எமது மாவட் டத்தில் காணப்பட்டாலும் அதைநாம் எதிர்கொண்டு இந்த விவசாயிகள் தங்களுடைய கவனத்தை செலுத்தி தங்களது முயற்சியால் அறுவடை நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றனர்
இங்கு கமநலசேவைதிணைக்களத்தின் சிறியகுளங்கள்நிறைய அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது படிப்படியாக அவர்கள்வருடாந்தம் நிதி ஒதுக்கீடு செய்து வந்தாலும் எமது மாவட்டத்துக்கு இன்னும் தேவை இருக்கின்றது குளங்கள் மீள்புனரமைப்பு செய்யவும்தேவைக்கேற்பகுழங்களைஅமைப்பதும் முக்கிய மானவிடயமாகும்
இங்கு ஆணையாளர்நாயகம்தனது உரையில் இங்கு விவசாயி களால் முன்வைக்கப்பட்ட அணைக்கட்டு நிருமாணிப்பு கோரிக்கையை 2 0 2 1 ம் வருடம் நிறைவேற்றிதருவதாகவாக்குறுயளித்தார்அதற்கு அவருக்கு நன்றிகூறுகின்றேன்
அதுமாத்திரமல்ல கமநலசேவைதிணைக்களத்திற்கு இன்னுமோர் பாரிய பொறுப்புள்ளதுமானிய உரம் விநியோகிப்பது இந்தவருடம் கொழும் பிலிருந்துமானிய உரத்தை கொண் டுவரபாரிய பிரச்சினை எதிர்நோக்கப் பட்டது இதனால் விவசாயிகள் சிரமத்தினை எதிர்நோக்கு கின்றனர் எல்லோரதுமுயற்சியிஇலும் காலம் தாழ்த்தியாவது மானிய உரம் கிடைத்தது இனிவரும் காலத்தில் உரிய காலத்துள் முன்கூட்டியே திட்டங்களை வகுத்து உரத்தைபெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது உண்மையில் .இவ்விழா வில் கொழும்பிலிருந்து வந்து கமநலசேவைஆணையாளர்நாயகம் கலந்து கொண்டு சிறப்பிப்பதுஇப்பிரதேசத்துக்கும் மாவட்டத்துக்கும் மிகுந்த மகிழ்வைதருகின்றது
ஆணையாளர்நாயம் என்னிடம் கலந்துரையாடுகையில் எமது 3 0 வருடம் பெரும் யுத்தத்தை எதிர்கொண்டுஇன்னல்பட்ட இப்பிரதேச ஏழைவிவசாயி களுக்கு நிறைய உதவிசெய்யவேண்டுமென்ற நல்லெண்ணத்தை வெளிப் படுத்தினார் எனவே அவருடைய கடமை காலத்துள்கூடிய நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ளமுடியும் இன்றைய விழாவை சிறப்பாக அமைத்த இருதரப்புக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்என மேலும் தமதுரையில்அரச அதிபர் தெரிவித்தார்.
No comments: