News Just In

7/01/2020 12:39:00 PM

கூட்டமைப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமாரின் தேர்தல் பணிமனை திறப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் கட்சி அலுவலகம் இன்று மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை மாமாங்கம் பிள்ளையார் ஆலயம் மற்றும், கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனையை தொடர்ந்து காலை 10.00 மணியளவில் இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், தமிழ் தேசிய கூட்டமைப்பு செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேட்பாளர் ஞா.ஸ்ரீநேசன், வேட்பாளர்களான பொறியியலாளர் மு.ஞானப்பிரகாசம், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்க ஸ்தாபகர் சி.தேவசிங்கன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், 

பிரதேச சபை தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், வடகிழக்கு இளைஞரணி தலைவர் சேயோன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



















No comments: