
தேசிய புலனாய்வுச் சேவையின் புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள தேசிய புலனாய்வுச் சேவை காரியாலயத்திலேயே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேர்ந்த கமலராஜ் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.


No comments: