News Just In

6/23/2020 01:53:00 PM

மட்டக்களப்பு-நாவலடி மக்களின் குடிநீர் தேவைக்கு தீர்வு

மட்டக்களப்பு-நாவலடி பிரதேச மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த குடிநீர் தேவைக்கான வேண்டுகோள் இன்று மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாவலடி பிரதேசத்தில் சுமார் 22 கிலோ மீற்றர் நீளத்திற்கு தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டு மக்கள் தங்களது குடிநீர் தேவையினை நிவர்த்தி செய்ய மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகியன இணைந்து வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளன.

இதன் மூலம் மக்கள் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பித்து குடிநீர் வசதியினை பெற்றுக்கொள்ள முடியும், 

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள்- நாவலடி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதாகவும், பல மில்லியன் செலவில் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும், குறிப்பாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பிரகாஷ் அண்ணனுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினார்.

குறித்த வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.











 

No comments: