News Just In

6/28/2020 08:17:00 PM

இயற்கை வீட்டுத்தோட்ட செய்கைக்கான சிரமதானப் பணி

கிராமப்புறங்களில் நஞ்சற்ற உணவுப் பதார்த்தங்களை உருவாக்குவதற்காக இயற்கையான வீட்டுத்தோட்டம் செய்வதற்குமான சிரமதானப் பணி இன்று மட்டக்களப்பு பதுளை வீதி கோபா வலி மற்றும் வெளிக்காட்டி கிராமத்தைச் சேர்ந்த தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இளைஞர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

தற்போது நகர்ப்புறங்களில்  நச்சு கலந்த உணவு பதார்த்தங்கள் அதிகளவு பாவனை படுவதனால் கிராம மட்டத்தில் தாங்களாகவே இயற்கை பசலைகளை செய்து அதன் மூலமாக நஞ்சற்ற உணவு வகைகளை உற்பத்தி செய்வதற்கான முதற்கட்ட வேலைத்திட்டமாக இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த நிகழ்வில் கோப்பா வெளிமற்றும் வெளிக்கா கண்டி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க இளைஞர் கழகம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் , செயற்ப்பாட்டாளர் உட்பட அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்

 இனிவரும் காலங்களில் கிராமப்புறங்களில் நஞ்சு கலந்த உணவு பதார்த்தங்கள் முற்றாக ஒழிப்பதற்கான வேலைத்திட்டம் ஆகவே இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே போன்று ஏனைய கிராமங்களிலும் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்









No comments: