News Just In

6/21/2020 05:44:00 PM

சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவன் சாதனை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட யோகாசனப்போட்டியில் மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் 3 வது இடம்....

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானியத்தினால் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட யோகாசனப்போட்டியில் 8-13 வயதுப்பிரிவுக்குரிய ஆண்கள் பிரிவில் சர்வதேச ரீதியில் 3 வது இடத்தைனை மட்டக்களப்பை சேர்ந்த ஐஸ்வர்யா யோகா கலைமன்ற மாணவன் பிரதீப் சர்வேஷ் பெற்றுக் கொண்டு மட்டக்களப்புக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த போட்டியில் சர்வதேச ரீதியில் 179 பேர் பங்கு பற்றியிருந்தனர். இணையம் மூலம் நடை பெற்ற இந்த போட்டியிலே இந்தியா , ஜப்பான் , சிங்கப்பூர் , மலேசியா போன்ற சர்வதேச நாடுகளின் மாணவர்களும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.




No comments: