News Just In

6/21/2020 06:12:00 PM

கொரோனாவால் உயிரிழந்த கர்ப்பிணி: இரட்டை குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர்கள்!


மதுரையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 45 வயதான கர்ப்பிணி இன்று பேறுகாலத்தின் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் அவரது இரட்டை குழந்தைகளை மருத்துவர்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர். அக்குழந்தைகளுக்கு கொரோனா பரவல் இல்லை என்றும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments: